Wednesday 18 November 2015

வழக்கமான குளிரூட்டிகளும் மாற்றி குளிரூட்டிகளும் - வேறுபாடுகள்

 வழக்கமான குளிரூட்டி - Normal Air conditioner
 மாற்றி குளிரூட்டி (Inverter Air conditioner)
 
குளிரூட்டி:

பெரும்பாலும்  இன்று வீட்டிலும் அலுவலகங்களிலும் நாம் பயன்படுத்தும் குளிரூட்டியானது நமது அறைகளை விருப்ப வெப்பநிலையான 25°C வைத்து இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கின் றோம். அதன் இயக்கம் என்பது மூ ன்று   பகுதிகளில்  உள்ளது 

1. காற்றோடி (cooling fan/ventilator) 
2. மின் அழுத்தி (electrical compressor)
3. செயலி மின்சுற்று பலகை(processor pcb)

மின் அழுத்தியானது, தன்னில் உள்ள வாயுவை அழுத்தி  நீர்மநிலையாக்கி அறையின் உள்ளே உள்ள ஊது கருவியில் உள்ள  வெப்பத்தை எடுத்துக்கொண்டு, மீண்டும் வாயுவாக்கி நமக்கு குளிர்ந்த காற்றைத்தருகிறது. இந்த வாயு மீண்டும் அழுத்தப்பட்டு, இந்த செயல் சுழற்சி முறையில் நடந்து நிலையான, இதமான வெப்பநிலையை நமக்கு தருகிறது.

      
வழக்கமான குளிரூட்டி:

  •  நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலையை எட்டும்வரை  மின் அழுத்தி இயங்கும்.(எ.கா: நிர்ணயிக்கப்பட்டது = 23°C ;  அறையின் வெப்பநிலை =28°C )
  • நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலையை அடைந்ததும் மின் அழுத்தி நின்றுவிடும் (எ.கா:  நிர்ணயிக்கப்பட்டது = 23°C ;  அறையின் வெப்பநிலை =23°)
  • மீண்டும் வெப்பநிலை அதிகரித்தவுடன்  மின் அழுத்தி இயங்க தொடங்கும்(எ.கா:  நிர்ணயிக்கப்பட்டது = 23°C ;  அறையின் வெப்பநிலை =25°C
  • இவ்வாறு ஒவ்வொரு முறையும் நின்றுனின்று முழுவீச்சில் இயங்குவதால் எடுத்துக்கொள்ளப்படும் மின்திறன் அதிகமாக உள்ளது.
  • மேலும் மின் அழுத்தியும் காற்றோடியும் ஒரே வேகத்தில் மட்டும் இயங்குவதாக உள்ளது. நமது அறையின் வெப்பநிலையும் சீராக இருக்காது . 
மாற்றி குளிரூட்டி: 
       
           இவ்வகை குளிரூட்டிகளில் VFD* மற்றும்/அல்லது VRF* எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது . அதற்கு ஏற்றாற்போல் மின் அழுத்தியும் காற்றோடியும் வெவ்வேறு வேகங்களில் செயல்பட ஏற்றதாக இருக்கும் . இதனால் இந்த குளிரூட்டியின் செயல்பாடுகள்  பின்வருமாறு இருக்கும் ,
  •  நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலையை எட்டும்வரை  மின் அழுத்தி இயங்கும்.(எ.கா:  நிர்ணயிக்கப்பட்டது = 23°C ;  அறையின் வெப்பநிலை =28°)
  •  நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலையை அடைந்ததும் மின் அழுத்தி முற்றிலும் நிற்காமல் வேகத்தை குறைத்து சிறிதளவு மின்னாற்றலுடன் இயக்கத்தில் இருக்கும்  (எ.கா: நிர்ணயிக்கப்பட்டது = 23°C ;  அறையின் வெப்பநிலை =23°)
  • மீண்டும்  வெப்பநிலை அதிகரித்தால் மின் அழுத்தி மிதமான வேகத்தில்   இயங்க தொடங்கும். பின்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும் (எ.கா:  நிர்ணயிக்கப்பட்டது = 23°C ;  அறையின் வெப்பநிலை =25°C
இவ்வாறு மாற்றி குளிரூட்டியானது அதிகபட்சமாக 40% மின்சாரத்தை சேமிக்கக் கூடியது.

மேலும் உங்கள் குளிரூட்டியில் உள்ள காற்று வடிகட்டியை வாரம் ஒரு முறை சுத்தம்  செய்தால் உங்கள் மின்சாரம் சேமிக்கப்படும்.

*வி ஆர் எப்(VRF) பற்றி மேலும் அறிய இந்த விக்கீ பக்கத்தினை பார்க்கவும்(ஆங்கிலம்)

*வி எப் டி (VFD) பற்றி மேலும் அறிய இந்த விக்கீ பக்கத்தினை பார்க்கவும்(தமிழ்)

உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்.. விரும்பினால் நண்பர்களுக்கும் பகிருங்கள்..





Friday 17 April 2015

ஏன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தான் நமது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய போகிறது..

தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களை பட்டியலிடுவோம்

காலை நாம் எழ உதுவுவது  விழி கடிகை, அது நமது கைபேசியில் இருக்கலாம் அல்லது இதற்கான சிறப்பு கடிகையாக இருக்கலாம்

நாம் குளிக்க பயன்படுத்தும் நீர், கழிவறையில் பயன்படுத்தும் நீர், உணவுக்கான நீர், பாண்டங்கள் கழுவ நீர் என அனைத்து  நீர் தேவைக்காகவும் நாம் நீரேற்று விசைப்பொறியை நம்பி உள்ளோம்

நாம் பயன்படுத்தும் அனைத்து மின் பொருட்களும் மின்சாரத்தை நம்பி உள்ளது

நாம் வேளைக்கு, பள்ளிக்கு, அலுவலகங்களுக்கு, கல்லூரிக்கு என எங்கு சென்றாலும் பொது போக்குவரத்து அல்லது நமது உந்துகளில் தான் செல்கிறோம்.

நாம் செல்லும் இடங்களிலும் நாம் மின்சாரத்தை பயனுக்கு உள்ளாக்குகிறோம், வீடு திரும்போம் போதும் இதே சுழற்சி மீண்டும் நடைப்பெறுகிறது.

இவ்வாறு  நாம் மின்சாரத்தையும், கச்சா எண்ணையையும், நம்பி உள்ளோம். இதனால் அடையும் பலன்களை விட பாதிப்புகள் அதிகம். இன்றளவும் நாம் கச்சா , நிலக்கரி, அணு போன்ற விடயங்களை நம்பி தான் வாழ்கிறோம். ஆனால் இவை விலை ஏறிக்கொண்டும் , நம்பகத்தன்மை இழந்தும் நமது எதிர்காலத்தை கேள்விகுரியாக்குகின்றன. 

ஒரு காலகட்டத்தில் இவை  தீர்ந்து போய்விடும் அபாயம் உள்ளது. உலக வெப்பமயமாதல், காற்று மாசு அடைதல், கதிர் வீச்சு போன்ற அபாயங்களும் உள்ளது. மேலும் விலை ஏற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. இவை பாதிக்கப்போகும் முதல் அடுக்கு மக்கள் சாமானியர்கள். பிறகு இது அரசு எந்திரத்தையும் அசைத்துவிடும்.  

சூரிய ஆற்றல் , காற்று, அலைகள் , உயிரி வளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் நாளுக்கு நாள் விலை மலிந்தும் , தொழில்நுட்பம் அதிகரித்தும் வருகிறது. மேலும் மின் உந்துகள் நமது எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றுகிறது.


சில புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் :

காற்று மின்சாரம் - கரை  காற்றாலை, கரை கடந்த காற்றாலை
உயிரி வளி - உந்துகளில் பயன்படுத்தும் வளி , சமையல் எரிவாயு

இவற்றின் பயன்பாடு மற்றும் செயல் திறன் போன்ற விடயங்களை பல இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

சில எதிர்கால மாற்றங்களின் துவக்கங்கள்: 



படம் : www.wired.com



                                                      படம் : www.skymetweather.com

உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்..