Friday 17 April 2015

ஏன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தான் நமது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய போகிறது..

தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களை பட்டியலிடுவோம்

காலை நாம் எழ உதுவுவது  விழி கடிகை, அது நமது கைபேசியில் இருக்கலாம் அல்லது இதற்கான சிறப்பு கடிகையாக இருக்கலாம்

நாம் குளிக்க பயன்படுத்தும் நீர், கழிவறையில் பயன்படுத்தும் நீர், உணவுக்கான நீர், பாண்டங்கள் கழுவ நீர் என அனைத்து  நீர் தேவைக்காகவும் நாம் நீரேற்று விசைப்பொறியை நம்பி உள்ளோம்

நாம் பயன்படுத்தும் அனைத்து மின் பொருட்களும் மின்சாரத்தை நம்பி உள்ளது

நாம் வேளைக்கு, பள்ளிக்கு, அலுவலகங்களுக்கு, கல்லூரிக்கு என எங்கு சென்றாலும் பொது போக்குவரத்து அல்லது நமது உந்துகளில் தான் செல்கிறோம்.

நாம் செல்லும் இடங்களிலும் நாம் மின்சாரத்தை பயனுக்கு உள்ளாக்குகிறோம், வீடு திரும்போம் போதும் இதே சுழற்சி மீண்டும் நடைப்பெறுகிறது.

இவ்வாறு  நாம் மின்சாரத்தையும், கச்சா எண்ணையையும், நம்பி உள்ளோம். இதனால் அடையும் பலன்களை விட பாதிப்புகள் அதிகம். இன்றளவும் நாம் கச்சா , நிலக்கரி, அணு போன்ற விடயங்களை நம்பி தான் வாழ்கிறோம். ஆனால் இவை விலை ஏறிக்கொண்டும் , நம்பகத்தன்மை இழந்தும் நமது எதிர்காலத்தை கேள்விகுரியாக்குகின்றன. 

ஒரு காலகட்டத்தில் இவை  தீர்ந்து போய்விடும் அபாயம் உள்ளது. உலக வெப்பமயமாதல், காற்று மாசு அடைதல், கதிர் வீச்சு போன்ற அபாயங்களும் உள்ளது. மேலும் விலை ஏற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. இவை பாதிக்கப்போகும் முதல் அடுக்கு மக்கள் சாமானியர்கள். பிறகு இது அரசு எந்திரத்தையும் அசைத்துவிடும்.  

சூரிய ஆற்றல் , காற்று, அலைகள் , உயிரி வளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் நாளுக்கு நாள் விலை மலிந்தும் , தொழில்நுட்பம் அதிகரித்தும் வருகிறது. மேலும் மின் உந்துகள் நமது எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றுகிறது.


சில புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் :

காற்று மின்சாரம் - கரை  காற்றாலை, கரை கடந்த காற்றாலை
உயிரி வளி - உந்துகளில் பயன்படுத்தும் வளி , சமையல் எரிவாயு

இவற்றின் பயன்பாடு மற்றும் செயல் திறன் போன்ற விடயங்களை பல இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

சில எதிர்கால மாற்றங்களின் துவக்கங்கள்: 



படம் : www.wired.com



                                                      படம் : www.skymetweather.com

உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்..